வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்கு பகுதிக்கான ஒதுக்கீடுகளில் 30% புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளுக்கு செல்லும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 16 OCT 2020 7:31PM by PIB Chennai
மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், 
வடகிழக்கு பகுதிக்கான ஒதுக்கீடுகளில் 30 சதவீதம் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளுக்கு செல்லும் என்று கூறினார்.
 
அருணாச்சலப் பிரதேசத்தின் சக்மாவிலிருந்து வந்திருந்த 'சக்மா மற்றும் ஹஜோங்குக்கான குடி மக்கள் உரிமைக் குழு' பிரதிநிதிகளிடையே பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வடகிழக்கு சபை, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் அறிவுரையின்படி சமர்ப்பித்த முன்மொழிதல் ஒன்றுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக திரு சிங் தெரிவித்தார்.
 
அதன் படி, வடகிழக்கு சபையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 30 சதவீதம் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளுக்கும், சமுதாயத்தின் பின் தங்கியுள்ள பிரிவினருக்கும் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் வளர்ந்து வரும் துறைகளுக்கும் ஒதுக்கப்படும் என்றார்.
 
 
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:


(Release ID: 1665454) Visitor Counter : 92


Read this release in: English , Urdu , Hindi , Telugu