சுற்றுலா அமைச்சகம்

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுற்றுலா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய சுற்றுலா அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் மெய்நிகர் கூட்டமொன்றை நடத்தினார்

प्रविष्टि तिथि: 16 OCT 2020 6:16PM by PIB Chennai
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுற்றுலா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் புது தில்லியிலிருந்து மெய்நிகர் கூட்டமொன்றை இன்று நடத்தினார்.
 
2020 அக்டோபர் 15 அன்று 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுற்றுலா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக இது நடைபெற்றது.
 
சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திரு யோகேந்திர திரிபாதி, சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குநர் திருமதி மீனாட்சி சர்மா மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
உள்நாட்டு சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே பயணம் செய்வதை எளிதாக்குவது, சுற்றுலா தொழிலுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் ஊக்கத்தொகை, பாதுகாப்பு நடைமுறைகளுக்காக சுற்றுலாத் துறை பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் (சாத்தி), தேசிய தரவு தளம் (நிதி) போன்ற நடவடிக்கைகளின் மூலம் சுற்றுலாத் துறைக்கு புத்தாக்கம் அளிப்பது போன்ற விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
 
 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

(रिलीज़ आईडी: 1665452) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi