வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: செப்டம்பர் 2020
Posted On:
15 OCT 2020 5:58PM by PIB Chennai
ஏப்ரல்-செப்டம்பர் 2020-21*-இல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு (பொருள்கள் மற்றும் சேவைகள் இணைந்து) 221.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)16.66 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது.
ஏப்ரல்-செப்டம்பர் 2020-21*-இல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 204.12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)35.43 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது.
குறிப்பு: சேவைகள் துறைக்காக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் ஆகஸ்ட் 2020-க்கு உரியவை ஆகும்.
செப்டம்பர் 2020-க்கான தரவுகள் மதிப்பீடுகளே ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்தடுத்த வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவை திருத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664831
(Release ID: 1665053)
Visitor Counter : 200