மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சர்வதேச பேராசிரியர்கள் தங்கும் விடுதியை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' தொடங்கி வைத்தார்

Posted On: 15 OCT 2020 5:59PM by PIB Chennai

சர்வதேச பல்கலைக்கழகங்களை ஈர்க்கும் வகையில், கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், சர்வதேச பேராசிரியர்கள் தங்குவதற்கென பிரத்தியேகமான கட்டிடத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் 100 சர்வதேச பேராசிரியர்கள் குறுகிய மற்றும் நீண்ட காலம் தங்கியிருந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் முடியும். இந்தக் கட்டிடத்தை மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். மேலும் மாணவர்கள் தங்கும் விடுதியில் இரண்டு புதிய அரங்குகளைக் கட்டுவதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கல்வித் துறையில், இந்தியா உலக அளவில் சிறந்து விளங்குவதாகவும்இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் இந்தியாவிலேயே தொடர்ந்து இருக்க தேசிய கல்விக் கொள்கை 2020 வழிவகை செய்யும் என்றும் கூறினார். 

உலகெங்கிலும் உள்ள மாணவர்கள், இந்தியாவில் வந்து கல்வி பயிலும் நிலை விரைவில் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664830

**********************


(Release ID: 1664948) Visitor Counter : 95