கலாசாரத்துறை அமைச்சகம்
கொவிட் பரவல் காலத்தில் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கலாச்சார அமைச்சகம் அறிவிப்பு
प्रविष्टि तिथि:
15 OCT 2020 6:56PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஐந்தாம் கட்ட தரவுகளின்படி, கலைத் துறையினரின் கோரிக்கையை ஏற்று கலாச்சார அமைச்சகம் கொவிட் பரவல் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை அறிவித்துள்ளது.
திரையரங்கு மற்றும் அரங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள், கலைஞர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தனித்தனியே அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒப்பனை அறைகள், மேடைகள், நுழைவு மற்றும் வெளியில் வரும் வாயில்கள், சீட்டு முன்பதிவு மற்றும் பணம் செலுத்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
திரையரங்கு மற்றும் அரங்கங்களில் 6 அடி இடைவெளி எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்னரும் அரங்கை சுத்தம் செய்ய வேண்டும், கிருமி நாசினி வழங்கப்படவேண்டும், சுவாச விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், அரங்கிற்கு வரும் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பொதுவான விதிமுறைகள் இந்த நிலையான செயல்பாட்டு வழிமுறைகளில் இடம் பெற்றுள்ளன. 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் பகுதிக்கு ஏற்ற வகையில் கூடுதல் விதிமுறைகளை வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரவிருப்பதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை இது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664866
**********************
(रिलीज़ आईडी: 1664938)
आगंतुक पटल : 274