ஆயுஷ்
கொவிட்-19 க்கு எதிரான மக்கள் இயக்கத்தில் ஆயுஷ் துறை உத்வேகத்துடன் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2020 6:19PM by PIB Chennai
கொவிட்-19 க்கு எதிரான மக்கள் இயக்கத்தை ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது. கொவிட்-19 சரியான நடத்தை முறை குறித்த மக்கள் இயக்கத்துக்கான பிரச்சாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த எட்டாம் தேதி துவக்கி வைத்தார். பொது மக்களுடன் நேரடித் தொடர்பில் ஈடுபடும் ஆயுஷ் வல்லுனர்கள், இந்தப் பிரச்சாரத்தை உத்வேகத்துடன் முன்னெடுத்து செல்லத் தயாராக உள்ளனர்.
"முகக் கவசம் அணியுங்கள், தனிநபர் இடைவெளியை கடைபிடியுங்கள், கை தூய்மையை பேணுங்கள்" என்ற மூன்று முக்கிய செய்திகளை வலியுறுத்தும் இந்தப் பிரச்சாரத்தை தேசிய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆயுஷ் இயக்குனரகங்களும் முன்னெடுத்துச் செல்லும். மேலும், 750 ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் இந்த பிரச்சாரத்திற்குத் தங்கள் முழுப் பங்களிப்பை வழங்குவர். ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுமார் இரண்டாயிரம் மக்கள் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664426
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1664583)
வருகையாளர் எண்ணிக்கை : 299