ஆயுஷ்

மைகவ் (MyGov) தளத்தில் நடத்தப்படும் ஆயுஷ் சஞ்சீவனி வினாடி வினா நிகழ்ச்சியின் மூலம் நோய் தடுப்பு முறையில் ஆயுஷின் தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது

Posted On: 14 OCT 2020 5:27PM by PIB Chennai

மைகவ் (MyGov) தளத்தில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான ஆயுஷ் சஞ்சீவனி வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மே-ஜூன் மாதங்களில் ஆயுஷ் அமைச்சகத்தால் இந்த போட்டி நடத்தப்பட்டது. மூன்று பரிசுப் பிரிவுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் மொத்தம் ஒன்பது பேர் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கொவிட்-19 பரவல் காலத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், பல்வேறு தொற்று மற்றும் நோய்களுக்கு ஆயுஷ் வழங்கும் தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664394

**********************



(Release ID: 1664528) Visitor Counter : 132