அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்தியாவின் ஹைட்ரஜன்& எரிவாயு செல்கள் ஆராய்ச்சி நிலையின் தொகுப்பு தொடக்கம்

Posted On: 14 OCT 2020 10:40AM by PIB Chennai

ஹைட்ரஜன் குறித்து நாட்டின் பல்வேறு விஞ்ஞானிகள், தொழிலகங்கள், பயன்பாட்டாளர்கள், ஆராய்ச்சி & வளர்ச்சி ஆய்வகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் இதர பங்குதாரர்கள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் தொகுப்புக்கான பணியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா அண்மையில் தொடங்கி வைத்தார்.

ஹைட்ரஜன் மற்றும் எரிவாயு செல்கள் குறித்த இந்திய நாட்டின் நிலை அறிக்கை என்று தலைப்பிடப்பட்ட இந்த தொகுப்பு, புதுப்பிக்கத் தக்க ஆற்றல் புதுமை இயக்கம் மற்றும் தூய ஹைட்ரஜன் சவாலில் பங்கேற்கும் நாடு என்ற வகையில் இந்தியாவின் கடமையின் ஒரு பகுதியாக ஹைட்ரஜன் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதை முன்னெடுக்க, பல்வேறு திட்டங்கள் மற்றும் உத்திகளை வளர்த்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விஷயங்களின் பல்வேறு விளக்கக்காட்சிகள் மற்றும் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளின் பலனாக உருவாக்கப்பட்டதாகும்.

கார்பன் உபயோகத்தை குறைத்தல் என்ற நமது கொள்கை இலக்கை அடைய நமது எரிசக்தி கலவையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதிக பயன்பாடாக மேற்கொள்ளப்படுகிறதுபல்வேறு காலகட்ட வரம்புக்குள் கார்பனை குறைப்பதற்கான பல்வேறு வழிகள் உள்ளன. அதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்வது என்பது தூய ஆற்றல் ஆதாரம் என்று கருதப்படுகிறது.

அடுத்த சில ஆண்டுகளில் கார்பன் உமிழ்வு இல்லை என்பதை நோக்கிய மாற்றத்தில் ஒரு ஆற்றலாக ஹைட்ரஜன் முக்கிய பங்கு வகிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664223

*******

(Release ID: 1664223)



(Release ID: 1664258) Visitor Counter : 203