மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

வீட்டிலிருந்து கொரோனா சிகிச்சை பெற தொலைதூர மருத்துவ சேவையை தொடங்கிய ஐஐடி காரக்பூர்

Posted On: 02 OCT 2020 6:06PM by PIB Chennai

கொரோனாவுக்கு எதிராக, உலகம் 6 மாதங்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறது. இன்னும் தடுப்பூசி வராத நிலையில், கொரோனா பாதிப்புக்கு சுகாதார ஊழியர்களும் ஆளாகி வருகின்றனர். இதனால் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, காரக்பூர் ஐஐடியின் கம்ப்யூட்டர் அறிவியியல் மற்றும் பொறியியல் துறை  iMediX என்ற தொலை தொடர்பு மருந்துவ முறையை உருவாக்கியுள்ளது.

இது வீட்டிலிருந்தே சிகிச்சை பெறுபவர்களை, மருத்துவமனையின் சுகாதார சேவையுடன் இணைக்கிறது. தொலை தூரத்திலிருந்தே டாக்டரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம்நோயாளிகளுக்கு, தங்கள் வீட்டிலேயே சுகாதார சேவை கிடைக்க இந்த  iMediX முறை உதவுகிறது.

இணையதளம் அல்லது செல்போன் மூலம்  iMediX  சேவையை பெற முடியும். இதில் நோயாளி தனது இ-மெயில் முகவரி அல்லது செல்போன் எண்-ஐ பதிவு செய்து, தனக்கு தேவையான மருத்துவ துறையை தேர்வு செய்து, தனது பிரச்னைகளை,ஸ்கேன் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.

அதற்கேற்ப மருத்துவமனை நிர்வாகம், மருத்துவரை ஒதுக்கீடு செய்யும். மருத்துவரின் ஆலோசனை நேரம், நோயாளிக்கு எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலமாக தெரிவிக்கப்படும். அதன் படி நோயாளி, மருத்துவரிடம் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். மருத்துவரின் பரிந்துரைகளையும் நோயாளி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661053

****************



(Release ID: 1663918) Visitor Counter : 143