நிதி அமைச்சகம்

ராஜஸ்தானில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களை மேம்படுத்த இந்தியா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கு இடையே 300 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2020 7:00PM by PIB Chennai

அனைவருக்கும் நிலையான தண்ணீர் விநியோகம், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை ராஜஸ்தானில் உள்ள 14 இரண்டாம் நிலை நகரங்களில் வழங்குவதற்கு நிதியளிப்பதற்காக இந்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கு இடையே 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் (நிதி வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி) திரு சமீர் குமார் காரேவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பில் அதன் இந்தியாவுக்கான இயக்குநர் திரு டகியோ கொனிஷியும் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பேசிய திரு காரே, இந்த நகரங்களில் உள்ள ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் உட்பட அனைவரின் வாழ்க்கை தரமும் இதன் மூலம் மேம்படும் என்று கூறினார்.

சிறப்பான, தரமான மற்றும் நிலையான தண்ணீர் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் ராஜஸ்தானின் இரண்டாம் நிலை நகரங்களில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

திரு கொனிஷி கூறுகையில், இந்த திட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கும் என்றும் அவர்களின் திறனை அதிகப்படுத்தி சீர்திருத்தங்களை உருவாக்கும் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663775

**********

(Release ID: 1663775)


(வெளியீட்டு அடையாள எண்: 1663915) வருகையாளர் எண்ணிக்கை : 176
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu