மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

சூப்பர் கம்ப்யூட்டிங்கிற்குத் தேவையான முக்கிய கூறுகளை இந்தியாவில் தயாரிப்பதன் மூலம் இந்தத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய உள்ளது


இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சூப்பர் கம்ப்யூட்டர் உள்கட்டமைப்பை வலுப்படுத்த சி-டாக் என்று அழைக்கப்படும் மத்திய உயர் கணினி மேம்பாட்டு மையமும், தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்க நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

சூப்பர் கம்ப்யூட்டிங்கிற்குத் தேவையான முக்கிய கூறுகளை இந்தியாவில் தயாரிப்பது, ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை நோக்கிய பயணம்: திரு சஞ்சய் தோத்ரே

Posted On: 12 OCT 2020 2:23PM by PIB Chennai

சூப்பர் கம்ப்யூட்டிங்கிற்குத் தேவையான முக்கிய கூறுகளை இந்தியாவில் தயாரிப்பதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் கல்வி மற்றும் தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே முன்னிலையில் சி-டாக் என்று அழைக்கப்படும் மத்திய உயர் கணினி மேம்பாட்டு மையமும், தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் இயக்க நிறுவனங்களும் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சி-டாக்கின் தலைவர் டாக்டர் ஹேமந்த் தர்பாரிக்கும், தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் இயக்கத்தின் தலைவருக்கும் இடையேயான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம், கான்பூர் ரூர்க்கி ஹைதராபாத் குவாஹாத்தி மாண்டி காந்திநகர், திருச்சியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், மொஹாலியில் உள்ள தேசிய வேளாண் உணவு உயிரி தொழில்நுட்பக் கழகம் ஆகிய நிறுவனங்களிலும் சூப்பர் கம்ப்யூட்டிங் இருக்கு தேவையான மூலக்கூறுகளை தயாரிக்க முடியும். இதேபோல சென்னை கரக்பூர் கோவா பாலக்காடு ஆகிய இடங்களில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் உயர்தர கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சிகள் வழங்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சஞ்சய் தோத்ரே, அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழில் துறை ஆகியவை சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சூப்பர் கம்ப்யூட்டர் இயக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தை நோக்கிய பயணமாக இந்த சூப்பர் கம்ப்யூட்டிங்கிற்குத் தேவையான முக்கிய கூறுகளை இந்தியாவில் தயாரிக்கும் முயற்சி அமைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663672

**********************


(Release ID: 1663725) Visitor Counter : 205