தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் திரு கங்வார் உரை: தொழில் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு முறைகள் அவசியம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களுக்கு நீடித்த தீர்வைக் கண்டறியுமாறு பிரிக்ஸ் நாடுகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்

Posted On: 11 OCT 2020 6:22PM by PIB Chennai

தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே சுமூக உறவை ஏற்படுத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை  முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்  என்றும், இதன்மூலம் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் வேலைவாய்ப்பையும் பெருக்க முடியும் என்றும், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு சந்தோஷ் கங்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திரு கங்வார், தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு, சுகாதாரம், பணியிடத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிரிக்ஸ் நாடுகளில் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது போன்றவை குறித்து ரஷ்யாவின் தலைமையில் நடைபெற்ற இந்த  தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கொவிட்-19 காரணமாக தொழில் நடைபெறும் இடங்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிமுறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய பாராளுமன்றத்தில் தொழில் பாதுகாப்பு குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட வழிமுறையையும் அமைச்சர் அப்போது எடுத்துரைத்தார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தில் தொழிலாளர்கள் சந்தித்துவரும் சவால்களுக்கு நீடித்த தீர்வைக் கண்டறியுமாறு பிரிக்ஸ் நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663547

----



(Release ID: 1663597) Visitor Counter : 173