மத்திய பணியாளர் தேர்வாணையம்
தேசிய பாதுகாப்புபடை அகாடமி (NDA) மற்றும் கடற்படை அகாடமி தேர்வு முடிவுகள் - I & II
Posted On:
09 OCT 2020 7:01PM by PIB Chennai
மத்திய அரசு தேர்வாணயைம் (யுபிஎஸ்சி) கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடத்திய, தேசிய பாதுகாப்பு படை அகாடமி(NDA) மற்றும் கடற்படை அகாடமி எழுத்து தேர்வுகள் 2020(I) & (II) முடிவுகளின் அடிப்படையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்களுடன் கூடிய விண்ணப்தாரர்கள், முப்படை தேர்வு வாரிய (SSB) நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த முடிவுகள் யுபிஎஸ்சி இணையதளத்திலும் www.upsc.gov.in. வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வு பட்டியல் தற்காலிகமானது. தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்ரகள், இந்திய தரைப்படை இணையதளத்தில் joinindianarmy.nic.in எழுத்து தேர்வு முடிவான 2 வாரத்துக்குள் பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையங்கள், நேர்காணல் தேதிகளை பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரி மூலம் தெரிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் dir-recruiting6-mod[at]nic[dot]in என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பலாம்.
எஸ்எஸ்பி நேர்காணலின் போது, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒரிஜினல் சான்றிதழ்களை மத்திய அரசு தேர்வாணயத்துக்கு விண்ணப்பதாரர்கள் அனுப்ப கூடாது. மேலும் தகவல்களுக்கு, யுபிஎஸ்சி ‘சி’ நுழைவு வாயில் அருகேயுள்ள உதவி மையத்தை நேரடியாகவும், 011-23385271/011-23381125 / 011-23098543 என்ற போன் எண்களிலும், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663206
----
(Release ID: 1663389)