தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
குழந்தை தொழிலாளர் முறையை முடிவுக்கு கொண்டு வந்து, குழந்தைகளை மேம்படுத்த அரசு உறுதி: அமைச்சர் திரு.கங்வார்
प्रविष्टि तिथि:
09 OCT 2020 7:05PM by PIB Chennai
மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை(தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார், “நமது தேசத்தின் எதிர்காலமாகத் திகழும் குழந்தைகளுக்கு, போதுமான நடைமுறைகளின் வாயிலாக மேம்படுத்துவது நமது பொறுப்பாகும்” என்று கூறினார்.
“அரசால் இன்றைக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வரும் நாட்களில் நமது இளைஞர்கள் தற்சார்பை உருவாக்கும் வகையில் நமக்கு உதவும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். காணொலி காட்சி மூலம் 8-ம் தேதி நடைபெற்ற குழந்தைகள் மற்றும் இளம் பருவத் தொழிலாளர்களுக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். “நான்கு தொழிலாளர் சட்டங்கள் மூலமாக கொண்டுவரப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சீர்திருத்தம், நமது நாட்டின் தொழிலாளர் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்பதை நிருபிக்கும்” என்றும் அவர் கூறினார்.
குழந்தைத் தொழிலாளர் முறையை முன்னுரிமை கொடுத்து முடிவுக்குக் கொண்டு வருவதே அரசின் தீவிரமான கடைமை என்றும் அமைச்சர் கருத்துத் தெரிவித்தார். “குழந்தைகள் மற்றும் பருவ வயது தொழிலாளர் தடை மற்றும் முறைப்படுத்துதல் 1986-ம் ஆண்டு சட்டம் நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கு அப்பால் வைக்கப்பட்டுள்ளதற்கு, அந்த சட்டம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்” என்றும் மத்திய அமைச்சர் கங்வார் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663207
---
(रिलीज़ आईडी: 1663387)
आगंतुक पटल : 238