பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இளம் வேளாண் தொழிலதிபர்களை ஊக்குவிப்பதுடன், இந்தத் துறையில் அவர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும், புதிய வேளாண் சீர்திருத்தங்கள் வழிவகுக்கும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2020 5:40PM by PIB Chennai
தில்லியின் டோடா மற்றும் கிஸ்த்வார் மாவட்ட விவசாயிகள் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சீர்திருத்தங்கள், இளம் தொழிலதிபர்களை ஊக்குவிக்கும் என்றும் வேளாண் துறையில் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெற ஏதுவாக அமையும் என்றும் கூறினார்.
தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலத்தில், இளைஞர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதாகவும், அதனைக் கருத்தில் கொண்டே இந்த புதிய சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் அனைவரும், இந்த வேளாண் மசோதாக்களைத் தாங்கள் வரவேற்பதாக ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663178
----
(வெளியீட்டு அடையாள எண்: 1663304)
வருகையாளர் எண்ணிக்கை : 159