உள்துறை அமைச்சகம்

திரு.ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த செய்தி கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். திரு.பஸ்வான் எப்போதுமே ஏழைகளுக்கும், உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் நலன்களுக்கு ஆதரவாகவும், உரிமைகளுக்காகவும் போராடியவர் என உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 08 OCT 2020 10:17PM by PIB Chennai

திரு.ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது தொடர் டிவிட் செய்திகளில், “திரு.ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள் மறைந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். திரு.பஸ்வான் எப்போதுமே ஏழைகளுக்கும், உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் நலன்களுக்கு ஆதரவாகவும் உரிமைகளுக்காகவும் போராடியவர். அவர் தமது அரசியல் வாழ்க்கையில் எப்போதுமே பொது நலனையும் தேசிய நலனையும் கொண்டிருந்தார். அவரது மறைவு இந்திய அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது.

1975-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனத்துக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், மோடி அரசின் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஏழைகள் நலன்களை உறுதிப்படுத்தும் அர்த்தமுள்ள செயல்களாகட்டும், இந்த எல்லாவற்றிலும் திரு. ராம் விலாஸ் பஸ்வான் தனிச்சிறப்பான பங்கு வகித்தார். திரு. பஸ்வான் முக்கியமான பதவிகளை வகித்தபோது, அவரது எளிய மற்றும் மென்மையான ஆளுமையால் ஒவ்வொருவராலும் விரும்பப்பட்டார். இந்திய அரசியல் மற்றும் மத்திய அமைச்சரவையில் அவர் இல்லாத வெற்றிடம் எப்போதுமே உணரப்படும். பீகாரின் வளர்ச்சி மற்றும் ஏழைகளின் நலன் என்ற அவரது கனவை முழுமையாக நனவாக்க மோடி அரசு கடமைப்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662902


(Release ID: 1663049) Visitor Counter : 149