உள்துறை அமைச்சகம்
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தில்லி மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைநகரங்களில் வழக்கமாக தேசியக் கொடி பறக்கும் கட்டிடங்களில், தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்
प्रविष्टि तिथि:
08 OCT 2020 11:44PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு ராம்விலாஸ் பஸ்வான், தில்லியில் 2020, அக்டோர்பர் 8ம் தேதி மறைந்ததற்கு மத்திய அரசு ஆழந்த வருத்தத்தை தெரிவிக்கிறது.
மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்துவதற்காக, தில்லி மற்றும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வழக்கமாக தேசியக் கொடி பறக்கும் கட்டிடங்களில், அக்டோபர் 9ம் தேதி அன்றும், இறுதி சடங்கு நடைபெறும் நாளில், இறுதி சடங்கு நடைபெறும் இடத்திலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த தலைவருக்கு, அரசு மரியாதை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதிசடங்கு நடைபெறும் தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662925
(रिलीज़ आईडी: 1663046)
आगंतुक पटल : 159