வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இரும்புத் தாது ஏற்றுமதி குறித்த விளக்கம்
2014க்கு முன்பே தீர்வை இல்லா இரும்புத் தாது உருண்டை ஏற்றுமதி நடைபெற்று வந்தது
1998- ஆம் ஆண்டு, குதிரேமுக் இரும்புத்தாது நிறுவனத்திற்கு மட்டுமே ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2020 8:04PM by PIB Chennai
இரும்புத் தாது ஏற்றுமதி குறித்து வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வணிகத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 1998ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி அறிவித்த அறிக்கையில், குதிரேமுக் இரும்புத்தாது நிறுவனத்திற்கு மட்டுமே ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2011-ல் இரும்புத்தாது உருண்டைக்கான ஏற்றுமதி தீர்வு ரத்து செய்யப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே தீர்வை இல்லா இரும்புத் தாது உருண்டை ஏற்றுமதி நடைபெற்று வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662853
(வெளியீட்டு அடையாள எண்: 1663009)
வருகையாளர் எண்ணிக்கை : 173