விவசாயத்துறை அமைச்சகம்
தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், உத்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் இருக்கும் 1,27,832 விவசாயிகளிடம் இருந்து 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் ரூ 2,882 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில் அக்டோபர் 6 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
Posted On:
07 OCT 2020 7:52PM by PIB Chennai
2020-21-ஆம் ஆண்டுக்கான கரிப் பருவத்தில் நெல் கொள்முதல் 2020 செப்டம்பர் 26 அன்று ஹரியானா மற்றும் பஞ்சாபில் தொடங்கியது. மேற்கு உத்திரப் பிரதேசத்தில் 2020 அக்டோபர் 1 அன்று தொடங்கிய நெல் கொள்முதல், சண்டிகரில் 2020 அக்டோபர் 2 அன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் 2020 அக்டோபர் 5 அன்று தொடங்கியது. இந்த தகவல்களை இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக செயலாளர் திரு சுதான்சு பாண்டே புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இன்று தெரிவித்தார்.
தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், உத்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் இருக்கும் 1,27,832 விவசாயிகளிடம் இருந்து 15,26,534 மெட்ரிக் டன்கள் நெல் ரூ 2,882 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில் அக்டோபர் 6 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
2020-21-ஆம் ஆண்டுக்கான கரிப் பருவம் சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி கரிப் பருவத்துக்கான கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது.
முந்தைய காலங்களைப் போலவே குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விளைப்பொருட்களை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது.
பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்திய உணவு கழகம் மூலமும் மாநில அரசின் முகங்களின் மூலமும் கரிப் 2020-21 பருவத்துக்கான நெல் கொள்முதல் வேகம் அடைந்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662457
----
(Release ID: 1662571)
Visitor Counter : 145