சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தாண்டை முன்னிட்டு, ‘‘பள்ளி குழந்தைகளுக்கு குடிமக்களின் கடமைகள்’ என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை, நிதி ஆயோக்கின் கீழ் செயல்படும் அடல் புதுமை திட்டத்துடன் இணைந்து நீதித்துறை நடத்தியது
Posted On:
07 OCT 2020 12:43PM by PIB Chennai
மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தாண்டை முன்னிட்டு, ‘‘பள்ளி குழந்தைகளுக்கு குடிமக்களின் கடமைகள்: சிறப்பாக செயல்பட பாடுபடுங்கள், விஞ்ஞான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள் மற்றும் கல்விக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள் ” என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை, நிதி ஆயோக்கின் கீழ் செயல்படும் அடல் புதுமை திட்டத்துடன் இணைந்து நீதித்துறை, கடந்த 2ம் தேதி, மாலை 7 மணிக்கு நடத்தியது. மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த ஆண்டின் 2 ஆண்டு கால கொண்டாட்ட முடிவுக்கு இது பொருத்தமான புகழஞ்சலி. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில், குடிமக்களாகிய நமது கடமைகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்து கூர்வதில் காந்திஜி முன்னணியில் இருந்தார். ‘‘உரிமைகளின் உண்மையான ஆதாரம் கடமைகள், நாம் அனைவரும் நம் கடமைகளை நிறைவேற்றினால், உரிமைகள் தேடுவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டிய தேவை இருக்காது என்ற தத்துவத்தில், காந்திஜி உறுதியாக இருந்தார்.
இந்த இணைய கருத்தரங்குக்கு முன்னோடியாக, ‘இந்திய அரசியலமைப்பு மற்றும் அடிப்படை கடமைகள்’ என்ற தலைப்பில் ஆன்லைன் வினாடி வினா போட்டியை கடந்த மாதம் 29ம் தேதி முதல் கடந்த 1ம் தேதி வரை ‘மைகவ்’ நடத்தியது. பள்ளி குழந்தைகளிடம் இந்திய அரசியல் அமைப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வினாடி வினா நடத்தப்பட்டது. இதில் 49 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற 15 பேர் இணைய கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டனர்.
இந்த இணைய கருத்தரங்கில், நீதித்துறை இணை செயலாளர் திரு நீரஜ் குமார் கயாகி, அடல் புதுமை திட்ட நிர்வாக இயக்குனர் திரு. ஆர். ரமணன், அர்ஜூனா மற்றும் கேல் ரத்னா விருது பெற்ற திருமிகு தோலா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி குழந்தைகள் கலந்து கொண்ட இந்த இணைய கருத்தரங்கில் பேசியவர்கள், கல்வி கற்பதன் முக்கியத்துவத்தையும், சிறு வயதிலேயே சிறிந்து விளங்க பாடுபட வேண்டும் என்பதையும் புதுமை கண்டுபிடிப்பு மற்றும் கேள்வி கேட்கும் உணர்வை வளர்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடமையையும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை, சிறப்பாக செய்ய வேண்டும் என கருத்தரங்கில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கருத்தரங்கு யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்தனர். இந்த இணைய கருத்தரங்கை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=vSMK3_m7bok
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662261
*******
(Release ID: 1662261)
(Release ID: 1662303)
Visitor Counter : 149