நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

கரிப் 2020-21 பருவத்துக்கான பயிர்களை விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் தன்னுடைய முதன்மை முகமைகளின் மூலம் அரசு தொடர்ந்து கொள்முதல் செய்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2020 7:55PM by PIB Chennai

2020-21-ஆம் ஆண்டுக்கான கரிப் பருவம் சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில், ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டங்களின் படி கரிப் பருவத்துக்கான கொள்முதல் முழுவீச்சில் நடக்கிறது.

முந்தைய காலங்களைப் போலவே குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விளைப்பொருட்களை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து கொண்டிருக்கிறது.

பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்திய உணவு கழகம் மூலமும் மாநில அரசின் முகமைகளின் மூலமும் கரிப் 2020-21 பருவத்துக்கான நெல் கொள்முதல் வேகம் அடைந்து வருகிறது.

இதர மாநிலங்களில் கொள்முதல் விரைவில் தொடங்க இருக்கிறது. 2020 அக்டோபர் 5 நிலவரப்படி, நெல்லின் ஒட்டு மொத்த கொள்முதல் ஏற்கனவே 11.14 லட்சம் மெட்ரிக் டன்களை தாண்டி உள்ளது. 87,000-க்கும் அதிகமான விவசாயிகளிடமிருந்து ரூபாய் 2,103.46 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662122

------


(வெளியீட்டு அடையாள எண்: 1662174) வருகையாளர் எண்ணிக்கை : 167
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Manipuri