விவசாயத்துறை அமைச்சகம்

துல்லியமான விவசாயத்திற்காக உணரி மட்டும் உணர்தல் என்னும் வைபவ் மாநாட்டு அமர்வை இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியது

Posted On: 06 OCT 2020 7:37PM by PIB Chennai

38 பேச்சாளர்கள் உட்பட 1,019 பேர் கலந்துகொண்ட துல்லியமான விவசாயத்திற்காக உணரி மட்டும் உணர்தல் என்னும் வைபவ் மாநாட்டு அமர்வை இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் 2020 அக்டோபர் 5 அன்று நடத்தியது.

வைஷ்விக் பாரதிய வைக்யானிக் (வைபவ்) என்னும் இந்திய அரசால் நடத்தப்படும் இந்த நிகழ்வு, இந்தியா மற்றும் வெளிநாட்டில் வாழும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான சர்வதேச மெய்நிகர் மாநாடாகும்.

உலகெங்கும் உள்ள இந்தியாவை சேர்ந்த கல்வியாளர்களையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் ஒற்றை தளத்தில் இணைத்து உலகளாவிய மேம்பாட்டுக்காக இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடித்தளத்தை வலுவாக்குவதே இதன் நோக்கமாகும்.

சர்வதேச மற்றும் இந்திய நிபுணர்கள் ஒரு மாதத்துக்கு பல்வேறு இணையக் கருத்தரங்குகள், காணொலிகளில் பங்கேற்பார்கள். 55 நாடுகளில் இருந்து 3000-க்கும் அதிகமான இந்திய வம்சாவளி கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளும், 10,000-க்கும் மேற்பட்ட இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களும் இதில் பங்கேற்கிறார்கள். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையில் சுமார் 200 கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் & தொழில்நுட்ப துறைகள் இம்மாநாட்டை அக்டோபர் மாதம் முழுவதும் நடத்துகிறார்கள்.

40 நாடுகளில் இருந்து 1500 பேர் மற்றும் 200 முன்னணி இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் 18 பலதரப்பட்டத் துறைகளில் 80 தலைப்புகளில் 200-க்கும் அதிகமான அமர்வுகளில் மெய்நிகர் முறையில் விவாதிப்பார்கள். சர்தார் படேல் ஜெயந்தியை முன்னிட்டு 2020 அக்டோபர் 31 அன்று நிறைவு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662115

                                                                   ---- (Release ID: 1662173) Visitor Counter : 204