மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பொருள் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 16 தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 06 OCT 2020 6:56PM by PIB Chennai

2020 ஏப்ரல் 1 அன்று அறிவிக்கப்பட்ட பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கான பொருள் சார்ந்த ஊக்கத்தொகை திட்டம், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரிவுகளின் கீழ் வரும் பொருட்களுக்கு அவற்றின் விற்பனையை பொறுத்து 4 முதல் 6 சதவீதம் வரை ஊக்கத்தொகையை வழங்குகிறது.

இந்தியாவில் தங்களது பொருட்களை உற்பத்தி செய்யும் தகுதியுடைய நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

பொருள் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 16 தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கைபேசி மற்றும் மின்னணுப் பொருட்களின் உற்பத்தியில் புதிய சகாப்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இது குறித்து பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத், உள்ளூர் மற்றும் சர்வதேச கைபேசி மற்றும் மின்னணு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா திட்டங்களுக்கு இதன் மூலம் மிகப்பெரிய ஊக்கம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662096

 -----(Release ID: 1662169) Visitor Counter : 15