மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய கல்வி அமைச்சரும்,சிறுபான்மையினர் நல அமைச்சரும் இணைந்து ஜார்க்கண்டில் ஜவஹர் நவோதயா பள்ளிக்கு, காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினர்
Posted On:
06 OCT 2020 6:53PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' மற்றும் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் ஜார்க்கண்டில் புதிதாக கட்டப்படவுள்ள ஜவஹர் நவோதயா பள்ளிக்கு காணொளி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினர். பிரதான் மந்திரி ஜன் விகாஸ் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் இந்த பள்ளி கட்டப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் போக்ரியால், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஊரக பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜவஹர் நவோதயா பள்ளிகளில் சமூகநீதி, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவை அடங்கிய தரமான கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது என்று கூறினார். இன்று அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பள்ளி, சுமார் 42 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த பணி நிறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கான நிதியை சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஏற்கும் என்று கூறிய அவர், மேலும் நான்கு நவோதயா பள்ளிகள், மேற்கு வங்கம், மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் நிதி உதவியுடன் கட்டப்படுவதாக மேலும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த ஆறு வருடங்களில் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கு சமூக பொருளாதார கல்வியை வழங்கி, வேலைவாய்ப்பு உள் கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளதாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662094
------
(Release ID: 1662168)
Visitor Counter : 138