நிதி அமைச்சகம்
42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள்
Posted On:
05 OCT 2020 7:44PM by PIB Chennai
42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி &பெருநிறுவனங்கள் உறவுத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் தலைமையில் காணொளி காட்சிமூலம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் உறவுத்துறை இணை அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர், மாநில அரசுகள் & யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய நிதி அமைச்சகம், மாநில அரசுகள்&யூனியன் பிரதேசங்களின் நிதித்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கி உள்ளது;
1.செஸ் வரி இழப்பீடானது மாற்றத்துக்கான ஐந்து ஆண்டுகாலத்துக்கும் அப்பாலும் அதாவது 2022-ம் ஆண்டு ஜூன் மாத்துக்கு அப்பாலும் நீடிக்கப்படும்.வருவாய் இடைவெளியை சரி செய்வதற்கு இந்த காலகட்டம் தேவைப்படலாம். இது குறித்த பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
2. 2020-21-ம் ஆண்டில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்களுக்கு 20,000 கோடி ரூபாயை இழப்பீடாக மத்திய அரசு விடுவிக்கிறது. 2017-18-ம் ஆண்டுக்கான ஐஜிஎஸ்டி 25,000 கோடி ரூபாய் தொகை அடுத்த வாரம் விடுவிக்கப்படும்.
3. ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான அம்சங்களின் விரிவாக்கம்; தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டிஆர்-1/3பி திட்டத்தில் புதிய ரிட்டர்ன் முறையாக சில கூடுதல் அம்சங்களை இணைப்பதற்கான அணுகுமுறைகளை கடந்த 2020 மார்ச் மாதம் நடந்த 39-வது கூட்டத்தில் கவுன்சில் பரிந்துரைத்தது. அப்போதில் இருந்து பல்வேறு விரிவாக்கப்பட்ட அம்சங்கள் ஜிஎஸ்டி பொது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிகம் செய்வதை எளிதாக்க மற்றும் இணக்கமான அனுபவத்தை மேம்படுத்தவும் மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன் , ஜிஎஸ்டி-யின் கீழ் ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான எதிர்காலத்துக்கான வழியை கவுன்சில் அங்கீகரிக்கிறது. ரிட்டர்ன் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்துவதும் வரிசெலுத்துவோருக்கு இணக்கமாக அவர்களின் சுமைகளை கணிசமாக குறைப்பதும்தான் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பின் நோக்கமாகும். வெளியில் விற்பனை செய்யப்பட்ட (ஜிஎஸ்டிஆர்-1) பொருட்களின் விவரங்களை வரி செலுத்துவோர் தகுந்த நேரத்தில் தாக்கல் செய்வதன் மூலம், அவரது விநியோகஸ்தர்கள் (1) உள்ளூர் விநியோகங்கள், இறக்குமதிகள் மற்றும் மீள் கட்டணங்களுக்கு செலுத்தபட்ட தொகை உள்ளிட்ட தங்களது அனைத்து ஆதாரங்களில் இருந்தும், தமது மின்னணு பற்று பேரேட்டில் இருக்கும் ஐடிசியை பார்க்க அனுமதிப்பார். வரிசெலுத்துவதற்கான காலக்கெடுவுக்கு முன்னர் மற்றும் (2) தமது அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் வரி செலுத்துவோர் நிரப்பிய தகவல்கள் வழியே (ஜிஎஸ்டிஆர்-3பி) தாமாக ரிட்டர்ன் பதிவு செய்யும் முறையை செயலாக்குதல். இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், உரிய நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டிஆர்-1 அறிக்கை மட்டுமே ஜிஎஸ்டிஆர்-3 பி படிவத்தில் ரிட்டர்ன் தாக்கல்செய்ய போதுமானதாக இருக்கும். அப்போதுதான் பொதுவான இணையதளத்தில் அது தானாக தயாராகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661827
(Release ID: 1662004)
Visitor Counter : 292