பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ வீரர்கள், குடும்ப உதவித்தொகை பெற தேவையான குறைந்தபட்ச தகுதி அக்டோபர் 1, 2019 தேதியிலிருந்து நீக்கப்படுகிறது

प्रविष्टि तिथि: 05 OCT 2020 5:32PM by PIB Chennai

தற்போதைய நடைமுறையின்படி ராணுவ வீரர்கள் தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் பணி புரிந்து நிறைவு செய்திருந்தால் மட்டுமே அவரது குடும்பத்திற்கு சாதாரண குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 

எனினும் அக்டோபர் 5-ம்  தேதியிட்ட அரசாணையின் படி இந்த ஏழு வருட குறைந்தபட்ச தகுதி நீக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 1, 2019க்கு முன்பு பத்து வருடங்களுக்குள் உயிர்நீத்த ராணுவ வீரர்கள், ஏழு வருடங்கள் தொடர்ந்து ராணுவத்தில் பணி செய்யா விட்டாலும் அவர்களது குடும்பத்திற்கு அக்டோபர் 1, 2019 முதல் ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661767

**********************


(रिलीज़ आईडी: 1661837) आगंतुक पटल : 236
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Marathi , Bengali , Telugu