அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் இரண்டு புதிய பைப்வோர்ட் தாவர வகைகளை, பூனாவின் அகர்கர் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
இந்த புதிய தாவர வகைகள், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை
Posted On:
04 OCT 2020 6:15PM by PIB Chennai
உலகெங்கிலும் உள்ள 35 உயிரியல் பன்முகத் தன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலையில் மருத்துவ குணங்கள் கொண்ட இரண்டு புதிய தாவர வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பைப்வோர்ட்ஸ் என்று அழைக்கப்படும் 111 இனங்களைக் கொண்ட இந்த தாவர வகை, மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக காணப்படுகிறது.
இவற்றில் பெரும்பாலானவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கிழக்கு ஹிமாலயா பகுதியிலும் காணப்படுகின்றன. அவற்றில் எரியோகாலான் சினேரியம் என்று அழைக்கப்படும் தாவர இனத்தில் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ குணம் உள்ளது. இதேபோல் பிற தாவர இன வகைகள் குடல் நோய் சிகிச்சைக்கு உகந்தது. எனினும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாவர இன வகைகளின் மருத்துவ தன்மைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.
பூனாவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் காணப்படும் இரண்டு அரிய வகை பயிர்களை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661594
****************
(Release ID: 1661621)