அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

முதியோர்களுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தியா & ஐப்பான் ஆலோசனை

Posted On: 03 OCT 2020 6:11PM by PIB Chennai

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட  இணைய கருத்தரங்கு  நிகழ்வில் முதியோர்களுக்கான சுகாதாரச்சேவைகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுதல் , முதிய வயது வரம்பை மறுபரிசீலனை செய்தல் மற்றும் அதற்கான ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கம், செயல்படுத்துதலுக்கான வழிகள் குறித்து இந்தியா, ஜப்பான் இருநாடுகளின் வல்லுநர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முதியோருக்கான தேசிய மையத்தின்  முன்னாள் டீன்(ஆராய்ச்சி) நோடல் அதிகாரியும், முதியோருக்கான மருத்துவதுறையின் முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவருமான ஏ.பி.டே கூறுகையில், முதியோருக்கான சுகாதாரச் சேவைக்கான தேசிய திட்டம், அயுஷ்மான் பாரத்  மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் நீண்டகால சுகாதார மரபுகளை அமல்படுத்துதல் ஆகியவற்றை விரிவாக்கும் முயற்சிகள் முதியோர்களின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உதவியாக இருக்கும் என்றார்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சார்பில், 2020ம் ஆண்டின் அக்டோபர் 1-ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக கொண்டாடும் வகையில் ஜப்பான் அரசின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும்தொழில்துறை அமைச்சகம், டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றோடு இணைந்து  சர்வதேச முதியோர் தினத்தின் இந்தியா-ஜப்பான் கொண்டாட்டங்கள் என்ற இணைய கருத்தரங்கு  ஒருங்கிணைக்கப்பட்டது. ஜப்பானுக்கான இந்திய தூதர் திரு.எஸ்.கே.வர்மா இதனை தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661362

****************


(Release ID: 1661586) Visitor Counter : 169