மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச மெய்நிகர் மாநாடான ரெய்ஸ் 2020-ஐ பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 5 அன்று துவக்கி வைக்கிறார்

Posted On: 03 OCT 2020 5:55PM by PIB Chennai

புதுதில்லி எல்க்ட்ரானிக்ஸ் நிகேதனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச மெய்நிகர் மாநாடான ரெய்ஸ் 2020-ஐ  மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்தது.

பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த மாநாட்டை அக்டோபர் 5 அன்று தொடங்கி வைக்கிறார். "தனது தரவுகள் மற்றும் புதுமைகளின் சக்தியின் மூலம், உலகின் செயற்கை நுண்ணறிவு ஆய்வகமாக உருவாக இந்தியாவால் முடியும். இதன் மூலம் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க முடியும்," என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த் கூறினார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் திரு அஜய் பிரகாஷ் சாவ்ஹானே, "சமூக நலனுக்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தரவுகளால் உந்தப்படும் சமூகமாக இந்தியா மாறுவதற்கான ஆரம்ப புள்ளியாக ரெய்ஸ் 2020 திகழும்," என்றார்.

கல்வி, ஆராய்ச்சித் துறை மற்றும் அரசாங்கத்தில் இருந்து 38,700-க்கும் அதிகமானோர் 125 நாடுகளில் இருந்து இது வரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள எம்ஐடி-யின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் டேனியலா ரூஸ், கூகிள் ரிசர்ச் இந்தியாவின் சமூக நலனுக்கான செயற்கை நுண்ணறிவு இயக்குநர் டாக்டர் மிலிந்த் தம்பே, ஐபிஎம் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நிர்வாக இயக்குநர் திரு சந்திப் படேல் உள்ளிட்ட நிபுணர்கள் 2020 அக்டோபர் 7 அன்று மூன்றாம் நாள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து 2020 அக்டோபர் 5 முதல் 9 வரை நடத்துகின்றன.

இம்மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி 2020 அக்டோபர் 5 அன்று மாலை 7 மணிக்கு துவக்கி வைக்கிறார். சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துவார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661356

****************



(Release ID: 1661408) Visitor Counter : 113


Read this release in: English , Urdu , Hindi , Telugu