விவசாயத்துறை அமைச்சகம்

தேசத்தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் ஒரு வார நிகழ்வுகளை ஒருங்கிணைத்தது

Posted On: 02 OCT 2020 5:14PM by PIB Chennai

தேசத்தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் ஒரு வார நிகழ்வுகளை ஒருங்கிணைத்தது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மைய இயக்குனரக வளாகத்தில் இயக்குனர் முனைவர் ஏ.கே.சிங் தலைமையில் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி காலை 9.30 முதல் 11.30 வரை (ஸ்வச்ச்தா அபியான்) தூய்மைப்படுத்தும் பணியுடன் ஏழு நாள் நிகழ்வுகள் தொடங்கின. விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களுடன் அனைத்து பிரிவுகளின் தலைவர்கள் தாங்களாக முன் வந்து நிகழ்வுகளில் பங்கேற்றனர். சிறந்த தூய்மை படுத்தும் நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளி போன்ற  அனைத்து முறைகளையும் கையாண்டு  இந்த சிறப்பு நிகழ்வில் மைய வளாகத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் தூய்மைப்படுத்தப்பட்டன.  தொடர்ந்து ஏழு நாட்களும் இதே போன்ற் பல்வேறு வகையான நிகழ்வுகள் நடைபெற்றன.

அக்டோபர் 2-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு நிறைவு விழா நடைபெற்றது. ஆன்லைனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி துறை மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் டைரக்டர் ஜெனரல் முனைவர் திரிலோக் சந்த் மஹபத்ரா, புகழ்பெற்ற காந்திய தத்துவஞானி பத்மஸ்ரீ முனைவர் ரவீந்திர குமார் ஆகியோர் பங்கேற்றனர். சரஸ்வதி வந்தனையுடன் தொடங்கிய இந்த நிகழ்வில், பங்கேற்ற அனைவரும் மகாத்மா காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் முனைவர் ஏ.கே.சிங் அனைவரையும் வரவேற்றார். காந்திய வழி விவசாயம் மற்றும் அது தற்காலத்துக்கு ஏற்றது  என்ற தலைப்பில் காந்திய தத்துவஞானி ரவீந்திர குமார் பேசினார். காந்திய தத்துவத்தின் பல்வேறு கொள்கைகள் மற்றும் இந்திய விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலில் அதன் முக்கியத்துவம் மற்றும் அதனை நிலையானதாக மாற்றுவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் அவர் எடுத்துக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661024

****************



(Release ID: 1661098) Visitor Counter : 102