அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவுப்பூர்வமான விஷயங்களின் ஜனநாயகமயமாக்கலுக்காக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல்: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர்
Posted On:
01 OCT 2020 5:08PM by PIB Chennai
ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் இயந்திரங்களின் எல்லைகள் என்னும் இணைய கருத்தரங்கில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரமுகர்கள், பல்வேறு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது அறிவுப்பூர்வமான விஷயங்களின் ஜனநாயகமயமாக்கலுக்கு எவ்வாறு வழி வகுக்கிறது என்பதை குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் அசுதோஷ் ஷர்மா, ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பதும், மனித மூளையை தாண்டி அறிவுடன் திகழ்வதும், தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தலும் தான் எதிர்காலம் என்று கூறினார்.
நேற்று மாலை (2020 செப்டம்பர் 30) நடைபெற்ற இந்த இணைய கருத்தரங்கு, பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் 25 மையங்களை நாடு முழுவதும் அமைப்பதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நோக்கத்தைக் குறித்து விவாதித்தது.
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத் உள்ளிட்ட பலர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அனைத்து பிரிவுகளிலும் முக்கிய நடவடிக்கைகளை அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை எடுத்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1660670
****************
(Release ID: 1660724)
Visitor Counter : 114