அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கடந்த 3,200 வருடங்களில் நடந்த சர்வதேச காலநிலை மாற்றங்கள் இந்தியாவின் மழைக்காலம், விவசாயம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்று சமீபத்திய ஆய்வில் தகவல்
प्रविष्टि तिथि:
01 OCT 2020 4:03PM by PIB Chennai
இமாலய புவியியலுக்கான வாடியா நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வில் கடந்த 3,200 வருடங்களில் நடந்த சர்வதேச காலநிலை மாற்றங்கள் இந்தியாவின் மழைக்காலம், விவசாயம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவின் கோடைக்கால பருவ மழையிலும் இந்த பருவநிலை மாற்றங்கள் குறிப்பிடத்தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
இமாலய புவியியலுக்கான வாடியா நிறுவனம், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற நிறுவனம் ஆகும்.
இமாச்சல் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள ரேவல்சார் ஏரியின் படிமங்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கிமு 1200 முதல் 550 வரை வடமேற்கு இமாலயப் பகுதிகளில் ஈரமான பருவ மழை நிலைமைகள் இருந்ததாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=)
****************
(रिलीज़ आईडी: 1660713)
आगंतुक पटल : 141