சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
திரு தாவர்சந்த் கெஹ்லோட் இணையம் மூலம் துணிகர மூலதன நிதியின் கீழ் பிற்படுத்தப்பட்டோருக்கான “அம்பேத்கர் சமூக புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல் இயக்கத்தை (ASIIM) ” துவக்கி வைத்தார்.
Posted On:
30 SEP 2020 6:06PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு. தாவர்சந்த் கெஹ்லோட், பிற்படுத்தப்பட்டோருக்காக, துணிகர மூலதன நிதியத்தின் கீழ் அம்பேத்கர் சமூக புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல் இயக்கத்தை (ASIIM), உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடையே புதுமையான நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. கெஹ்லோட், பிற்படுத்தபட்டோர் / மாற்று திறனாளி இளைஞர்களிடையே புதிய தொழில்முனைவோராக உருவாவதுடன், வேலை கொடுப்பவர்களாக அவர்கள் வளரும் நோக்கில், சமூக நீதி அமைச்சகம் பிற்படுத்தப்பட்டோருக்காக, துணிகர மூலதன நிதியை (VCF –SC) 2014-15 ஆம் ஆண்டில் தொடங்கியுள்ளது என்று கூறினார்.' பிற்படுத்தப்பட்ட தொழில்முனைவோரின் நிறுவனங்களுக்கு சலுகை நிதி வழங்குவதே இந்த நிதியத்தின் குறிக்கோள். இந்த நிதியின் கீழ், பிற்படுத்தபட்ட தொழில் முனைவோர் ஊக்குவித்த 117 நிறுவனங்களுக்கு வணிக முயற்சிகளை அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
(VCF –SC) நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் என்றும் வேலை தேடுபவர்களிடமிருந்து வேலை வழங்குபவர்களாக மாற அவர்களுக்கு உதவும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும் ‘ தற்சார்பு இந்தியா’ முன்முயற்சியையும் இது முன்னெடுக்கிறது என தெரிவித்தார்.
********
(Release ID: 1660602)
Visitor Counter : 266