அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு சிடிஆர்ஐ விருதுகளை வழங்கி சிஎஸ்ஐஆர்-சிடிஆர்ஐ கவுரவித்துள்ளது

प्रविष्टि तिथि: 30 SEP 2020 5:29PM by PIB Chennai

லக்னோவைச் சேர்ந்த மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் சிடிஆர்ஐ, இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு சிடிஆர்ஐ விருதுகளை நேற்று வழங்கி கவுரவித்தது. மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்த விருதுகள் மெய்நிகர் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. 2020-க்கான சிடிஆர்ஐ விருதுகளை டாக்டர் புஷ்ரா அடீக், டாக்டர் சுரஜித் கோஷ், டாக்டர் ரவி மஞ்சித்தயா ஆகியோர் பெற்றனர். இந்த விஞ்ஞானிகள், புற்றுநோயின் முடிச்சை அவிழ்த்து சிறப்பான பங்களிப்பை செலுத்தியுள்ளனர். சிடிஆர்ஐ இயக்குநர் பேராசிரியர் தபாஸ் குண்டு, சிடிஆர்ஐ செயல் இயக்குநர் டாக்டர் வி.பி. காம்போஜ் ஆகியோர் விருது பெற்றவர்களை வாழ்த்தினர்.

ரசாயன அறிவியல் மற்றும் வாழ்க்கை அறிவியல்  துறைகளில் இரண்டு தனி விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் ரூ.20,000 ரொக்கப் பரிசும், பாராட்டு பத்திரமும் கொண்டதாகும்.

(Release ID: 1660343) 


(रिलीज़ आईडी: 1660583) आगंतुक पटल : 121
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi