நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி விற்பனைக்காக நிலக்கரி சுரங்கங்களின்ஏலத்திற்கான தொழில்நுட்பஏலவிண்ணப்பப் படிவங்கள் திறந்து பார்க்கப்பட்டன

Posted On: 30 SEP 2020 5:05PM by PIB Chennai

நாட்டில் 38 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளின் ஒரு பகுதியாக ஆன்லைன் மூலமாகவும், ஆஃப்லைன் மூலமாகவும் வரப்பெற்ற தொழில்நுட்ப ஏலவிண்ணப்பப் படிவங்கள், ஏலம் கேட்பவர்களின் முன்னிலையில் இன்று - 30 செப்டம்பர் 2020 - புது தில்லியில் காலை 10 மணி முதல் திறந்து பார்க்கப்பட்டன.

 

23 நிலக்கரி சுரங்கங்களுக்கு 76 தொழில்நுட்ப ஏல விண்ணப்பப் படிவங்கள் வரப் பெற்றுள்ளன. 19 நிலக்கரி சுரங்கங்களுக்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஏல விண்ணப்பப் படிவங்கள் வரப் பெற்றுள்ளன.

 

இந்த ஏல விண்ணப்பப் படிவங்கள் பல்துறை சார்ந்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் மதிப்பீடு செய்யப்படும். தொழில்நுட்ப மதிப்பீட்டில் தகுதி பெறும் ஏல விண்ணப்பதாரர்கள் 19 அக்டோபர் 2020 அன்று எம் எஸ் டி சி இணையதளத்தில் நடைபெறவுள்ள மின் ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

****


(Release ID: 1660322)(Release ID: 1660560) Visitor Counter : 147