பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

விவாகரத்து பெற்ற மகள்கள் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 26 SEP 2020 6:24PM by PIB Chennai

விவாகரத்து பெற்ற மகள்கள் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன என்று மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

தற்போது, விவாகரத்து இன்னும் வழங்கப்படாத போதிலும், பணி செய்து கொண்டிருந்த அல்லது ஓய்வு ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த ஒரு மகளின் பெற்றோர் உயிரோடு இருந்த காலத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்தாலே குடும்ப ஓய்வூதியம் பெற அவர் தகுதி உடையவர் ஆவார்.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையால் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்களை பற்றி ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்ளும் போது மேற்கண்ட தகவல்களை அமைச்சர் தெரிவித்தார்.

முன்னர் இருந்த விதிகளின்படி பணிபுரிந்து கொண்டிருந்த அல்லது ஓய்வு பெற்றுக்கொண்டிருந்த பெற்றோர் உயிருடன் இருக்கும் போதே அவர்களுடைய மகளுக்கு விவாகரத்து கிடைத்து இருந்தால் மட்டுமே அவர் குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் ஆவார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த புதிய சுற்றறிக்கையின் மூலம் ஓய்வூதியம் பெறும் தனிநபர்களின் வாழ்க்கை எளிமை ஆவதோடு, சமுதாயத்திலுள்ள விவாகாரத்து பெற்ற மகள்களுக்கு மரியாதை மிகுந்த சம உரிமைகள் கிடைக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1659364


(Release ID: 1659596) Visitor Counter : 652