மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டை அக்டோபர் 5 அன்று பிரதமர் துவக்கி வைக்கிறார்

Posted On: 24 SEP 2020 6:38PM by PIB Chennai

ரைஸ் 2020 (RAISE 2020- ‘Responsible AI for Social Empowerment 2020) என்னும் செயற்கை நுண்ணறிவு குறித்த மாபெரும் மெய்நிகர் மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து 2020 அக்டோபர் 5 முதல் 9 வரை நடத்துகின்றன.

இம்மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி 2020 அக்டோபர் 5 அன்று மாலை 7 மணிக்கு துவக்கி வைக்கிறார். சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துவார்கள்.

சமூக மாற்றம், உள்ளிணைப்பு மற்றும் சுகாதாரம், வேளாண்மை, கல்வி மற்றும் திறன்மிகு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு ஆகியவற்றுக்காக எவ்வாறு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தலாம் என்பது குறித்து இவர்கள் விவாதிப்பார்கள்.

மாநாட்டைப் பற்றி பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் திரு அஜய் பிரகாஷ் சவ்ஹ்னே, "செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் மாற்றங்களை உருவாக்கியிருப்பதாகவும், வளர்ச்சியை வேகப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்ற செயற்கை நுண்ணறிவால் முடியும்," என்று கூறினார்.

சுகாதாரம், வேளாண்மை, கல்வி, திறன் வளர்த்தல், போக்குவரத்து, நிதி தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து இந்த மாநாடு ஆராயும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1658758

 



(Release ID: 1658838) Visitor Counter : 230


Read this release in: English , Hindi , Marathi , Telugu