இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மனிதகுலத்துக்கும், நாட்டுக்கும் சேவை புரிவது நமது பாரம்பரியமாகும் என்று நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் உரை

Posted On: 24 SEP 2020 6:48PM by PIB Chennai

2018-19-ஆம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை மெய்நிகர் முறையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் 2020 செப்டம்பர் 24 அன்று வழங்கினார்.

புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் இருந்து மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாடு அமைச்சர் திரு கிரண் ரிஜுஜு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பல்கலைக்கழகம் / +2 குழு, நாட்டு நலப்பணித் திட்ட பிரிவுகள் மற்றும் அதன் திட்ட அலுவலர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட்ட தன்னார்வலர்கள் என்று மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இளைஞர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமிகு உஷா சர்மா மற்றும் இதர பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரு கோவிந்த், மனிதகுலத்துக்கும், நாட்டுக்கும் சேவை புரிவது நமது பாரம்பரியமாகும் என்று கூறினார்.

சேவையாற்றுவது என்பது நமது வேர்களில் உள்ளது என்று கூறிய குடியரசுத் தலைவர், மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளில் 1969-ஆம் ஆண்டில் நாட்டு நலப்பணித் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறினார்.

 

மகாத்மா காந்தியை உதாரணமாக காட்டிய அவர், சேவை என்பது மனிதர்களுக்கு மட்டுமே செய்வது அல்ல என்றும், இயற்கைக்கு செய்வதும் சேவை தான் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1658762

 

*

PSB/GB



(Release ID: 1658835) Visitor Counter : 161


Read this release in: Bengali , English , Hindi , Punjabi