பாதுகாப்பு அமைச்சகம்
டி ஆர் டி ஓ-வின் இன்னுமொரு தொழில் ஆதரவு நடவடிக்கை
Posted On:
24 SEP 2020 4:28PM by PIB Chennai
தொழில்களுக்கு ஆதரவு அளிப்பதற்கான இன்னும் ஒரு நடவடிக்கையாக, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலோடு,
டி ஆர் டி ஓ மற்றும் ஏ டி வி பி-யின் வளர்ச்சி ஒப்பந்தங்களுக்கான செயல்திறன் பாதுகாப்பு தேவை தளர்த்தப்பட்டுள்ளது.
டி ஆர் டி ஓ கொள்முதல் கையேடு பி எம் 2016-இல்
திருத்தப்பட்டுள்ள பத்தி 12.5-இல் குறிப்பிட்டுள்ளபடி வளர்ச்சி ஒப்பந்தங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
அதே சமயம், உத்திரவாத காலகட்டத்தில் டி ஆர் டி ஓ மற்றும் ஏ டி வி பி-யின் நலனைப் பாதுகாப்பதற்காக வெற்றிகரமான வளர்ச்சி பங்குதாரரிடம் இருந்து உத்திரவாத பத்திரம் பெறப்படும்.
ஆதரவு தொழில்களுக்கு இந்த நடவடிக்கை இன்னுமொரு முக்கியமான மைல்கல் என்று
டி ஆர் டி ஓ டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658680
*
PSB/GB
(Release ID: 1658744)
Visitor Counter : 176