விவசாயத்துறை அமைச்சகம்
பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் திட்டங்கள் விவசாயிகளுக்கு அளிக்கும் பலன்கள் உள்ளிட்ட அறிவிப்புகள்
Posted On:
23 SEP 2020 1:47PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர், திரு நரேந்திர சிங் தோமர், கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.
பிரதமரின் கிரிஷி சிஞ்சயி யோஜனா என்னும் திட்டம், நாட்டில் உள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் பாதுகாப்பான நீர் பாசனத்தை வழங்குவதற்காகவும், ஒரு சொட்டு தண்ணீரில் அதிக விளைச்சலை (பி எம் டி சி) உறுதி செய்வதற்காகவும், பெரிதும் விரும்பப்படும் ஊரக செழிப்பை உருவாக்குவதற்காகவும் 2015-16-இல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் 2017-18-இல் மத்திய நிதி உதவியாக ரூபாய் 2819.49 கோடி வழங்கப்பட்டு, 10.48 லட்சம் ஹெக்டேர்கள் சொட்டு நீர் பாசனத்தில் பயன்பெற்றன. 2018-19-இல் மத்திய நிதி உதவியாக ரூபாய் 2818.38 கோடி வழங்கப்பட்டு, 11.58 லட்சம் ஹெக்டேர்கள் சொட்டு நீர் பாசனத்தில் பயன்பெற்றன. 2019-20-இல் மத்திய நிதி உதவியாக ரூபாய் 2700.01 கோடி வழங்கப்பட்டு, 11.72 லட்சம் ஹெக்டேர்கள் சொட்டு நீர் பாசனத்தில் பயன்பெற்றன.
விவசாயம் மாநிலங்கள் பட்டியலில் இருந்தாலும் வேளாண் துறையின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மண்வள அட்டை திட்டத்தின் கீழ் 2015-16-இல் ரூ 200 கோடியும், 2016-17-இல் ரூ 368.30 கோடியும், 2017-18-இல் ரூ 458.76 கோடியும், 2018-19-இல் ரூ 384.19 கோடியும், 2019-20-இல் ரூ 333.95 கோடியும் ஒதுக்கப்பட்டது.
வேளாண்துறை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் 2014-15-இல் ரூ 208.3 கோடியும், 2015-16-இல் ரூ 177.85 கோடியும், 2016-17-இல் ரூ 180 கோடியும், 2017-18-இல் ரூ 577.58 கோடியும், 2018-19-இல் ரூ 1200 கோடியும், 2019-20-இல் ரூ 1033.34 கோடியும் ஒதுக்கப்பட்டது. 2020-21-இல் இதுவரை ரூ 1033.39 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காய்கறி சமையல் எண்ணெய்கள், பருப்புகள், பண்ணை பசுமை பழங்கள், பச்சை முந்திரி கொட்டைகள், பருத்தி மற்றும் வாசனைப் பொருட்கள் போன்ற முக்கிய வேளாண் பொருட்கள் நமது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்த வேளாண் இறக்குமதியில் மேற்கண்ட பொருட்கள் 84 சதவீதம் பங்கை வகிக்கின்றன.
வேளாண் பொருட்களை பொருத்தவரை உபரியாகவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியை இன்னும் பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அழுகக் கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைப்பதற்காக 8186 குளிர்பதன மையங்கள் நாடு முழுவதும் உள்ளன. இவற்றில் 374.25 லட்சம் மெட்ரிக் டன்கள் பொருட்களை சேமிக்கலாம்.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், பிரதமரின் விவசாயிகள் சம்பதா திட்டம் போன்றவற்றின் மூலம் குளிர்பதன வசதிகளை ஊக்குவிப்பதற்காகவும், பெருக்குவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கரிப், ராபி மற்றும் இதர வணிகப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தி உள்ளது. உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிகமாக கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் விலைகள் உயர்த்தப்பட்டன.
தேசிய கிரிஷி விகாஸ் திட்டத்தின் கீழ், "புதுமைகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோர் வளர்ச்சி" என்னும் நடவடிக்கையை வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை செயல்படுத்தியுள்ளது.
வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் செயல்படும் 346 புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) நிதி உதவிக்காக ரூ 36.72 கோடி நிதி உதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658115
(Release ID: 1658172)
Visitor Counter : 139