ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கொவிட் 19 நோய்க்கான குறைந்த செலவிலான தடுப்பு மருந்துகளை தயாரித்து விநியோகிக்கும் முதல் தொழில் துறையாக இந்திய மருந்தாளுமைத் தொழில்துறை விளங்கும் என்று திரு கௌடா நம்பிக்கை

Posted On: 17 SEP 2020 6:39PM by PIB Chennai

கொவிட் நோய் தாக்கிய கடினமான காலத்தில் இந்திய மருந்தாளுமைத் துறை ஆற்றிய பங்கு குறித்து மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு டி வி சதானந்தகவுடா பாராட்டு தெரிவித்தார். உலக அளவிலான இந்த பெருந்தொற்று நோய்க்கு குறைந்த செலவிலான தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வழங்கும் முதல் மருந்தாளுமைத் துறையாக இந்திய மருந்தாளுமைத் துறை விளங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இன்வெஸ்ட் இந்தியா பார்மா யூரோ மற்றும் மருந்தாளுமைத்துறை இணைந்து இ ஐ எஃப் 2020 மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்தாளுமை பிரிவு பதிப்பு -- இத்துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள், இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள், கட்டமைப்பு என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழிக் கருத்தரங்கு ஒன்றில் காணொலி மாநாடு மூலமாக நேற்று மாலை அவர் உரையாற்றினார்.

 

இந்தக் கடினமான காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் இந்திய மருந்தாளுமை மற்றும் மருத்துவக் கருவிகள் தொழில் துறை சூழலுக்கு ஏற்ப செயல்பட்டன என்று அவர் கூறினார். தனிநபர் பாதுகாப்பு கவச கிட்டுகளை இறக்குமதி செய்து வந்த இந்தியா, இப்போது இவற்றைத் தயாரிக்கும் இரண்டாவது பெரிய நாடாக மாறியுள்ளது எனக்கும், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கிறது. நாளொன்றுக்கு ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அளவிற்கு தயாரிக்கும் வகையில், தினசரி உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

 




(Release ID: 1656066) Visitor Counter : 162