ஜல்சக்தி அமைச்சகம்

தேசிய தண்ணீர் கொள்கை, வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பிகாரில் அணை கட்டுமானம் தொடர்பான அறிவிப்புகள்

Posted On: 17 SEP 2020 6:26PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய ஜல் சக்தி மற்றும் சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா, கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.

 

தண்ணீர் துறையின் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்காக, தேசிய கல்வி கொள்கையை திருத்த முடிவெடுக்கப்பட்டு, இதற்கான குழு ஒன்று 2019 நவம்பர் 5 அன்று அமைக்கப்பட்டது. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, இக்குழுவுக்கு அளிக்கப்பட்ட ஆறு மாத காலக்கெடு தற்போது 2020 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தின் பாதிப்புகளை நாடு கண்டு வருகிறது. இவற்றைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மாநில அரசுகளுக்கு முக்கிய விஷயங்களில் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன.

 

மத்திய நீர் ஆணையம் அளித்த தகவலின் படி, மிதிலைப் பகுதி மற்றும் தர்பங்கா மாவட்டத்தில் அணை கட்டுமானம் உட்பட எந்தவொரு பெரிய அல்லது மத்திய தர நீர்ப்பாசன திட்டத்துக்கும் மாநில அரசிடம் இருந்து கருத்துரு கடந்த ஐந்து வருடங்களில் பெறப்படவில்லை.

 

ஆனால், 2020 ஜூன் 12 அன்று தாக்மாரா ஹைட்ரோ எலெக்ட்ரிக் திட்டத்துக்கு மத்திய மின்சார ஆணையத்திடம் இருந்து கருத்துரு வரப்பெற்றது. இதை 2020 ஜூன் 24 அன்று மத்திய நீர் ஆணையம் ஏற்றுக் கொண்டது.


(Release ID: 1655843) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Marathi , Punjabi