சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

"அரசின் அணுகுமுறை சிறுபான்மையினர் இதர சமூகத்தினருடன் கல்வி மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சமமான பங்குதாரர்களாக இருக்குமாறு செய்திருக்கிறது"- திரு முக்தார் அப்பாஸ் நக்வி

Posted On: 17 SEP 2020 5:50PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி, கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.

 

சமுதாயத்தின் அனைத்து பிரிவினரின் முழுமையான மேம்பாட்டில் அரசு உறுதி பூண்டுள்ளது. அரசின் அணுகுமுறை சிறுபான்மையினர் இதர சமூகத்தினருடன் கல்வி மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சமமான பங்குதாரர்களாக இருக்குமாறு செய்திருக்கிறது.

 

உயர்நிலைக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித் திட்டம், மௌலான ஆசாத் தேசிய ஊக்கத்தொகை திட்டம், நய சவேரா இலவச பயிற்சி திட்டம், பதோ பர்தேஷ், புதிய உடான் மற்றும் புதிய ரோஷினி ஆகிய திட்டங்களை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

 

கடந்த இரண்டு வருடங்களில், ஆந்திரப் பிரதேசத்தில் சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதிகளில் 75 திட்டங்களையும், மகாராஷ்டிராவில் சிறுபான்மையினர் அதிகம் உள்ள பகுதிகளில் 14 திட்டங்களையும், மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

 

கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றில் இந்த திட்டங்கள் கவனம் செலுத்துகிறது. பள்ளிக் கட்டிடங்கள், மாணவர் விடுதிகள், கல்லூரிகள், தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொது சேவை மையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகின்றன.

 

பிரதமர் ஜன் விகாஸ் கார்யாகிராம் என்னும் திட்டத்தின் கீழ் உத்திரப் பிரதேசத்துக்கு 2015-16-இல் ரூ 32462 லட்சமும், 2016-17-இல் ரூ 14364 லட்சமும், 2017-18-இல் ரூ 15182.02 லட்சமும், 2018-19-இல் ரூ 37653.07 லட்சமும், 2019-20-இல் ரூ 16207.94 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

 

நாட்டில் சிறுபான்மையினர் அதிகம் உள்ள 1300 பகுதிகளில் பிரதமர் ஜன் விகாஸ் கார்யாகிராம்  செயல்படுத்தப்படுகிறது. இந்த மத்திய திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. 2018-இல் இத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டது.


(Release ID: 1655825) Visitor Counter : 133


Read this release in: English , Urdu , Marathi , Punjabi