மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சிக்ஷாக்பர்வ் முன்முயற்சியின் கீழ் ‘’ தகுதி அடிப்படையிலான கல்வி மற்றும் கற்றல் முடிவுகள்’’ குறித்த வெபினார்
Posted On:
17 SEP 2020 5:22PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சகம், சிக்ஷாக்பர்வ் முன்முயற்சியின் கீழ் ‘’ தகுதி அடிப்படையிலான கல்வி மற்றும் கற்றல் முடிவுகள்’’ என்பது குறித்த வெபினாருக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமர்வை என்சிஇஆர்டி-யின் தொடக்க கல்வி துறையின் தலைவர் பேராசிரியர் சுனிதி சன்வால் ஒருங்கிணைத்து நடத்தினார். என்சிஇஆர்டி-யின் வெளியீட்டு பிரிவு தலைவர் பேராசிரியர் ஏ.கே.ராஜ்புத், 2017-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற அசாமைச் சேர்ந்த திரு. சசாங்கா ஹசாரிகா ஆகிய நிபுணர்கள் கலந்து கொண்டனர். புதிய கல்வி கொள்கை 2020-ஐ முன்னெடுக்கவும், ஆசிரியர்களைக் கவுரவிக்கவும் சிக்ஷாக்பர்வ், 2020 செப்டம்பர் 8 முதல் 25 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
தகுதி அடிப்படையிலான கல்வி பற்றிய கருத்தியல் குறித்து பேராசிரியர் சுனிதி சன்வால் விளக்கி கூறினார். தகுதி திறன் என்பது கவனிக்கப்பட்டு அளவிடப்படும் அறிவு, திறன்கள், அணுகுமுறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இவ்வாறு பெறப்படும் அறிவு, உண்மையான வாழ்க்கையில் தீர்வுகளைக் காண்பதற்கு மாற்றப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
தகுதி அடிப்படையிலான கல்வி மற்றும் கற்றல் முடிவுகள் குறித்த பல்வேறு அம்சங்களை புதிய கல்வி கொள்கை 2020 பரிந்துரைத்துள்ளதாக பேராசிரியர் ஏ.கே. ராஜ்புத் விளக்கினார்.
தகுதி அடிப்படையிலான கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என திரு. சசாங்கா ஹசாரிகா யோசனை தெரிவித்தார். இந்த கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், தாம் ,ஆன்லைன் மூலம் காணொலிகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருவது பற்றிய தமது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
(Release ID: 1655754)
Visitor Counter : 170