உள்துறை அமைச்சகம்

எல்லை தாண்டிய ஊடுருவல்

Posted On: 15 SEP 2020 6:05PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவும் முயற்சிகள்  தொடர்ந்து நடக்கின்றன.  2019 ஆகஸ்ட் முதல் 2020 ஜூலை வரை கடந்த 12 மாதங்களில் மாதந்தோறும் ஏராளமான  ஊடுருவல்  முயற்சிகள்  நடந்துள்ளன.

இந்தியாவின் நில எல்லைகள் பாலைவனங்கள், மலைப் பகுதிகள்வனங்கள் மற்றும்  நதியாகவும் உள்ளன. இந்த எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகளை தடுத்து, எல்லைகளை பாதுகாக்க, மத்திய அரசு பலவிதமான அணுகுமுறையை பின்பற்றுகிறது. சர்வதேச எல்லைப் பகுதிகளில், எல்லை பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்படுகின்றனர். எல்லையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு நிலைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எல்லையில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு, உளவுப் பிரிவு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லையில் வேலிகள் அமைக்கப்பட்டு, அதிக ஒளி வீசும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆறுகள் அமைந்துள்ள இடைவெளிப் பகுதிகளில் தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. 

இத்தகவலை, மக்களவையில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு.நித்யானந்த ராய் தெரிவித்தார்.

தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் கீழ்கண்ட இணைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. 

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1654597#.X2C46jpfqgs.whatsapp

****



(Release ID: 1654868) Visitor Counter : 122


Read this release in: English , Urdu , Manipuri , Telugu