எஃகுத்துறை அமைச்சகம்

எஃகு அமைச்சகத்தின் கீழ் திறன் வளர்ப்பு மையங்கள்

Posted On: 14 SEP 2020 3:29PM by PIB Chennai

மேல்நிலை எஃகு தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம், எஃகு மேம்பாடு மற்றும் வளர்ச்சி நிறுவனம் மற்றும் பிஜு பட்நாயக் தேசிய  எஃகு நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் எஃகு துறையில் பயிற்சி அளிப்பதற்காக இயங்குகின்றன.

இது தவிர, எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை வழங்குகின்றன.

2019-20-இல் கிட்டதட்ட 5 ஆயிரம் பேருக்கு இந்த துறையில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றிய புள்ளிவிவரங்களை மத்திய  எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமான பதிலின் மூலம் மக்களவையில் இன்று அளித்தார்.

அவற்றை பற்றி தெரிந்துகொள்ள இந்த இணைப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1654016

***


(Release ID: 1654104) Visitor Counter : 107