ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

2023-க்குள் உரங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும்: திரு கவுடா

Posted On: 13 SEP 2020 3:55PM by PIB Chennai

இறக்குமதிகள் மீது சார்ந்து இருப்பதை குறைப்பதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 40 ஆயிரம் கோடியில் புதிய உர உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டு கொண்டிருப்பதால், 2023-க்குள் உரங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு சதானந்த கவுடா கூறினார்.

கர்நாடக விவசாயிகளுக்காக 
இஃப்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தற்சார்பு இந்தியா மற்றும் நிலையான விவசாயம்' என்னும் இணைய வழியிலான கருத்தரங்கில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"உள்ளூர் தொழில்களை ஊக்கப் படுத்துவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா லட்சியத்தின் படி, அனைத்து உர நிறுவனங்களையும் வாயு சார்ந்த தொழில் நுட்பத்திற்கு மாற்றி வருகிறோம்," என்று அவர் கூறினார்.

"நாட்டில் உள்ள நான்கு உர நிறுவனங்களுக்கு (ராமகுண்டம், சிந்திரி, பரவுணி மற்றும் கோரக்பூர்) சமீபத்தில் புத்தாக்கம் அளித்துள்ளோம். 2023-க்குள் உரங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும்," என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653770



(Release ID: 1653844) Visitor Counter : 172