சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 நிலவரத்தை பிரதமரின் முதன்மை செயலாளர் விரிவாக ஆய்வு செய்தார்
Posted On:
12 SEP 2020 8:34PM by PIB Chennai
கொவிட்-19 தயார் நிலை மற்றும் பதிலடியை விரிவாக ஆய்வு செய்வதற்காக உயர்மட்ட கூட்டம் ஒன்றுக்கு பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி கே மிஷ்ரா இன்று தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பேசிய அவர், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சிறந்த பணியை பாராட்டினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலையோடு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பாதிப்புகள் அதிகம் உள்ள சில குறிப்பிட்ட மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் மீது அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் அதன் விநியோகம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமைச்சரவை செயலாளர் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் பால், முதன்மை அறிவியல் ஆலோசகர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653681
(Release ID: 1653819)
Visitor Counter : 151