புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

ஜூலை, 2020 மாதத்துக்கான தொழில் உற்பத்திக் குறியீடு மற்றும் உபயோகம்-சார்ந்த குறியீட்டின் துரித மதிப்பீடுகள் (அடிப்படை 2011-12=100)

प्रविष्टि तिथि: 11 SEP 2020 5:30PM by PIB Chennai

தொழில் உற்பத்திக் குறியீட்டின் (IIP) விரைவு மதிப்பீடுகள், ஆறு வாரங்கள் இடைவெளியுடன் ஒவ்வொரு மாதத்தின் 12ஆம் தேதியன்று (அல்லது அதற்கு முந்தைய வேலை நாளன்று), ஆதார முகமைகளிடம் இருந்து பெறப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.

தயாரிப்புத் தொழிற்சாலைகள்/நிறுவனங்களிடம் இருந்து இந்தத் தகவல்கள் ஆதார முகமைகளுக்குக் கிடைக்கும்.

கொவிட்-19 பெருந்தொற்று பரவிவருவதைக் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, பெரும்பாலான தொழில்துறை நிறுவனங்கள் 2020 மார்ச் மாத இறுதி வாரத்திலிருந்து இயங்கவில்லை. இது பொதுமுடக்கக் காலத்தில் நிறுவனங்களின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. ஜூலை 2020-க்கான குறியீடு 118.1 ஆக இருக்கிறது. இது ஏப்ரல் 2020-இல் 54 ஆகவும், மே மாதத்தில் 89.5 ஆகவும், ஜூனில் 108.9 ஆகவும் இருந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்

 

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1653370


(रिलीज़ आईडी: 1653432) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Manipuri , English , Urdu , हिन्दी , Assamese