சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ 10,000 கோடிக்கும் அதிகமான நிதி நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது; கூடுதலாக ரூ 2,500 கோடி விரைவில் விரைவில் வழங்கப்படும்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                09 SEP 2020 2:04PM by PIB Chennai
                
                
                
                
                
                
                சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ 10,339 கோடி நிதி கொவிட்-19 காலகட்டத்தில் எளிமைபடுத்தப்பட்ட பரிவர்த்தனை செயல்முறையின் படி வழங்கப்பட்டுள்ளது; 
கூடுதலாக ரூ 2,475 கோடி விரைவில் விரைவில் வழங்கப்படும். நாட்டில் தரமான சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காகவும், பங்குதாரர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகவும், வர்த்தகத்தை எளிதானதாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பரிவர்த்தனை செயல்முறையை எளிமைபடுத்தியுள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், ஒப்பந்ததாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பணத்தை வழங்கி வருகிறது.
அது மட்டுமில்லாமல், கொவிட்-19 பெருந்தொற்றின் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக ஒப்பந்ததாரர்களுக்கும், சலுகைதாரர்களுக்கும் பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அமைச்சகம் வழங்கியுள்ளது.         
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1652545
                
                
                
                
                
                (Release ID: 1652775)
                Visitor Counter : 200